Saptharishi.org இணைய தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் சனாதன தர்மத்தின், குறிப்பாக பிராமணர்களின் குரலுக்கானது.
இந்த இணைய தளம் பின்வரும் முக்கிய நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது:
பிராமண வெறுப்பு பேச்சிற்கு சவால் விடுதல்
- சனாதன தர்மத்திற்கு, குறிப்பாக பிராமண சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சிற்கு சவால் விடுதல்.
- காலனித்துவ காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்ட பிராமணர்களுக்கு எதிரான பேச்சினையும், பொய் பிரச்சாரத்தினையும் எதிர்கொண்டு, உண்மைச் செய்திகளை பதிவிடுதல்.
- இந்துக்களை அழித்து, பாரதீய நாகரிகத்தை ஒழிப்பதே வெறுப்பாளர்களின் இலக்காக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதற்கு பிராமண சமூகம் தடையாக இருக்கும் என்பதால், அவர்கள் முதலில் இனப்படுகொலை செய்யப்படக்கூடும்.
- தேவைப்படும் இடங்களில், அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் பொய் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வது.
உண்மை செய்திகளை பதிவிடுவதல்
- இந்து தர்ம கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் பிராமணர்களின் பங்கு ஆகியவற்றை சரியான முறையில் புரிந்து கொள்ளும் வகையில், தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஒரு உண்மை விளக்கத்தைத் தருதல்.
- பாரதிய பரம்பரை மரபு சார்ந்த தலைப்புகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கல்வி சார்ந்த நிறுவன வழிமுறைகளை உருவாக்குதல்.
தர்ம காரியங்களை ஆதரித்தல்
- பல்வேறு அழுத்தங்களுக்கு இடையேயும் (பொருளாதார, சமூக நிலை போன்றவை) தர்ம பாதையை கைவிடாமல், அதில் தொடர்ந்து பயணிக்கும் பிராமணர்களை அங்கீகரித்து கௌரவித்தல்.
- சாதி அல்லது மத வேறுபாடின்றி, ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகைகள், பாரதிய பரம்பரையின் மரபுகள் மற்றும் தர்மம் பற்றிய கல்வி வழங்குதல்.
Saptharishi.org–எங்களது நோக்கங்கள்
இந்தத் தருணத்தில், உங்கள் மனதில் பல கேள்விகள் எழலாம்.
- இதை போன்ற குறிக்கோள்களை ஆதரிக்கும் வேறு சில இணையதளங்களிலிருந்து இந்த இணையதளம் எவ்வாறு வேறுபடுகிறது?
- இதன் பின்னணியில் உள்ள குழு என்ன?
- இந்த முயற்சிக்கு நிதியளிப்பது யார்?
- இது ஒரு அரசியல் இயக்கமா?
- இந்த நோக்கங்களை எவ்வாறு நிறைவேற்ற உத்தேசித்துள்ளீர்கள்?
- இந்த இணையம் ’சனாதன தர்ம மேலாதிக்கம் அல்லது பிராமண மேலாதிக்கம்’போன்ற சிந்தனைகளை ஊக்குவிக்கிறதா?
- இதற்கு சப்தரிஷி என்று பெயர் வைப்பதன் முக்கியத்துவம் என்ன?
இந்தக் கேள்விகளில் சிலவற்றை விடையளிக்க, கேள்வி மற்றும் பதில் வடிவத்தில் 3 நிமிட (FAQ) காணொளி உருவாக்கியுள்ளோம். இந்த காணொளி இணையதளத்தின் ‘காணொளிகள்’ பிரிவில் உள்ளது.
உங்களுக்கு மேலும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால்,info@saptharishi.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நான் எப்படி பங்குபெற முடியும்?
- சனாதன தர்மத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த முயற்சியில் இணைய வரவேற்கப்படுகிறார்கள். இதில் உறுப்பினர் கட்டணம் அல்லது வேறு எந்த நிதியும் இல்லை. பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் (விரும்பினால்), வாட்ஸ்அப் எண் (விரும்பினால்) போன்ற விவரங்களுடன் இணைய தளத்தில் பதிவு செய்யவும்.
- எங்கள் செய்திமடல் குழுமத்தில் சேர பணிவன்புடன் வேண்டுகிறோம். மாதத்திற்கு இரண்டு முறை புதிய செய்திமடல் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
- மாதத்திற்கு 1 மணிநேரம் என்ற சிறிய நேர அர்ப்பணிப்புடன் உங்கள் வீட்டிலிருந்தே நீங்கள் எங்களை ‘ஆன்லைனில்’ஆதரிக்கலாம்.
- எங்கள் ஆதரவாளர்கள் மற்றவர்களின் மீது எந்த விதமான வெறுப்புணர்வுப் பேச்சுலோ அல்லது நமது நாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை மீறும் நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்பதே எங்கள் பணிவான வேண்டுகோள் மற்றும் எதிர்பார்ப்பு.
- மேலும் தகவல் தேவைப்பட்டால், முகப்புப் பக்கத்திலிருந்தும் ‘வீடியோக்கள்’ துணை மெனுவிலிருந்தும் அணுகக்கூடிய ‘ உறுப்பினர் (Membership)’ என்ற தலைப்பிலுள்ள வீடியோவை மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இயக்கத்தின் ஒரு அங்கமாக மாறுவது மற்றும் அதில் பங்களிப்பது பற்றி உங்களுக்கு கூடுதல் தகவல் தேவைப்பட்டால், info@saptharishi.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.