எங்கள் கோரிக்கைக்கான சில முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
காலனித்துவ காலத்தில் பிராமண வெறுப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இது பூர்வீக கலாச்சாரம், மரபுகள் மற்றும் அறிவு அமைப்புகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட பாரதிய நாகரீக அழிவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பிராமணர்கள் இந்த அழிவு திட்டத்துக்கு தடையாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் முதலில் குறி வைக்கப்படுகிறார்கள். நாகரீக அறிவு பரிமாற்றம் அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது என்பதால், பிராமண வெறுப்பு வெற்றியடைந்த பிறகு, நாகரீகம் அழியும் வரை மற்ற அனைத்து சமூகங்களும் ஒவ்வொன்றாக குறிவைக்கப்படும்.
பிராமண வெறுப்பு பிரச்சாரத்தின் தவிர்க்க முடியாத விளைவு பிராமண இனப்படுகொலை, இந்து அழிவு மற்றும் இறுதியில் பாரதிய நாகரிகத்தின் அழிவு ஆகும்.
பிராமண வெறுப்பு பேச்சு (பிரம்மோபோபியா என அழைக்கப்படுகிறது) சில முக்கிய ஊடகங்களில் இயல்பாகவே பேசப்படுகிறது அல்லது எதிர்ப்பு இல்லாமல் அதற்கு நியாயப்படுத்தப்படுகிறது.
சமூக வலைதளங்கள் பிராமண வெறுப்பு பிரச்சாரத்தால் நிரம்பியுள்ளன. ஆன்லைன் வெறுப்பு பிரச்சாரம் வன்முறைக்கு வழிவகுப்பதால் உலக நிகழ்வுகளில் உண்மையாக விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி ஆய்வுகள் காட்டுகின்றன ( உதாரணத்திற்கு மியான்மரைப் பொறுத்தவரை, சமூக வலைதளங்கள் நேரடியாக வன்முறையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது)
உலகளவில் கட்டமைக்கப்பட்ட சில அரசு சாரா அமைப்புகள் (அல்லது ஒருவேளை அரசு நிதியுதவி பெற்ற அமைப்புகள்) சமூக ஊடகங்களில் பிரம்மோஃபோபியா வெறுப்பு பேச்சு கருத்துக்களை உருவாக்கி பரப்புவதில் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்கிறார்கள்.
அரசாங்கமே (தெரிந்தோ, தெரியாமலோ) பள்ளிப் பாடப் புத்தகங்கள் மூலம் இனவெறி ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டைப் பரப்பி, ‘நமக்கு எதிராக அவர்கள்’ என்ற வேற்றுமை கருத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாறு கடந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இளம் மனங்களில் விதைக்கப்பட்ட வெறுப்பின் விதைகள் இப்போது ஒரு பெரிய மரமாக வளர்ந்துள்ளன.
மகாத்மா காந்திஜியின் படுகொலைக்குப் பிறகு சுதந்திர இந்தியா பிராமண இனப்படுகொலையைக் கண்டது.
காஷ்மீரி பண்டிட் சமூகம் பண்டிட்களாகப் பிறந்த ஒரே தவறுக்காக இன வன்முறை செயல்களால், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டது. இந்த இனப்படுகொலையை செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. இட மாற்றம், இடம்பெயர்தல் போன்ற சொற்களைப் பயன்படுத்தி இந்த இனப்படுகொலையை உலகத்தின் பார்வையிலிருந்து மறைக்கும் வகையில்
சில விஷமிகளால் திட்டமிட்ட உலகளாவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
“பிராமண இனப்படுகொலை: இந்து அழிவுக்கு முன்னோடி” என்ற தலைப்பில் சமீபத்திய வெளியான புத்தகம், பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளின் காலனித்துவ தோற்றம், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பிராமண படுகொலைகளின் பல்வேறு நிகழ்வுகளை ஆவணப்படுத்துகிறது. சில முக்கிய ஊடகங்கள், சமூக ஊடகங்கள், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO), சில பிரபலங்கள் மற்றும் பல இடங்களில் பிரம்மோஃபோபியா (பிராமணர்களைக் குறிவைக்கும் வெறுப்பு பேச்சு) பற்றிய தற்போதைய ஆதாரங்களையும் இப் புத்தகம் பகிர்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள பிராமணர்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க தனிச் சட்டம் ஏன் தேவை என்ற கேள்வியையும் புத்தகம் விவாதிக்கிறது. இந்த புத்தகத்தின் பிரதியை உங்கள் பார்வைக்காக உங்கள் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம்.
நியூசிலாந்தின் சட்ட வல்லுனர் ஜெர்மி வால்ட்ரான், (Jeremy Waldron)” வெறுப்பு பேச்சில் உள்ள தீங்கு” என்ற புத்தகத்தில், வெறுப்புப் பேச்சு நவீன ஜனநாயக அரசு கட்டமைக்கப்பட்ட இரண்டு முக்கியமான தூண்களான உள்ளடக்கிய தன்மையையும் (inclusiveness), கண்ணியத்தையும் சேதப்படுத்துகிறது என்று வாதிடுகிறார், கீழே நாம் பேராசிரியர் வால்ட்ரானை மேற்கோள் காட்டுகிறோம்:
“ஒரு நபரின் கண்ணியம் என்பது அவரின் வெளித்தோற்றத்தை பொருத்தல்ல. இது அவர்களின் சமூக நிலைப்பாடு, அடிப்படை நற்பெயரின் அடிப்படைகள். அவை சமூகத்தின் சாதாரண நடவடிக்கைகளில் சமமாக நடத்தப்படுவதற்கு உரிமையளிக்கின்றன. அவர்களின் கண்ணியம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழும்போதும், தங்கள் தொழிலில் ஈடுபடும்போதும், குடும்பத்தை வளர்க்கும்போதும், மறைமுகமாகவும், சலசலப்பு இல்லாமலும் அவர்கள் நம்பக்கூடிய ஒன்று. இதனைக் குழிதோண்டிப் புதைப்பதற்காகவே வெறுப்புப் பேச்சுக்கள் வெளியிடப்படுகின்றன. யாரை குறிவைக்கப்படுகிறதோ அவர்களின் கண்ணியத்தை, அவர்களின் சொந்த பார்வையிலும் மற்ற சமூக உறுப்பினர்களின் பார்வையிலும் சேதப்படுத்துவ தே இதன் நோக்கம்.
நமது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 பின்வருமாறு கூறுகிறது:
‘சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையை தவிர, எந்தவொரு நபரின் உயிரையும் அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தையும் பறிக்கக்கூடாது’.
மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ராம் ஷரண் ஆத்யானுபிரசி இந்திய ஒன்றியம் (MANU/SC/0406/1988: AIR 1989 உச்ச நீதிமன்றம் 549) என்ற வழக்கில் அரசியலமைப்பின் 21 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வுரிமை என்பது மனிதனின் வாழ்க்கை, அதாவது அவனது பாரம்பரியம், கலாச்சாரம், அந்த பாரம்பரியத்தை அதன் முழு அளவில் பாதுகாத்தல் போன்றவை உள்ளடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஐநா பொதுச் சபையில் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) பிரிவு 12 கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது:
எந்த ஒரு மனிதரும் அவரது தனியுரிமை, குடும்பம், வீடு அல்லது கடிதப் பரிமாற்றத்தில் தன்னிச்சையான குறுக்கீடு அல்லது அவரது மரியாதை மற்றும் நற்பெயர் மீதான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படாமல் சுதந்திரமாக வாழமுடியும். அத்தகைய தலையீடு அல்லது தாக்குதலுக்கு எதிராக சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
• பிராமண சமூகத்தை குறி வைக்கும் வெறுப்பு பேச்சுகள் பிரிவு இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 15(1)ஐ மீறுவதாகும். ஏனெனில் இந்த அரசியலமைப்பு பிரிவுகள் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு மட்டுமே எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டாது மற்றும் எந்த ஊனம், பொறுப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உட்பட்டது அல்ல என்று உத்தரவாதம் அளிக்கிறது.
எனவே, ‘பிராமணர்கள் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை’ இயற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு ராஷ்டிரபதியின் செயலகம், மாண்புமிகு பிரதமர் அலுவலகம், இந்திய உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதிபதியின் அலுவலகம் மற்றும் தொடர்புடைய அரசாங்க அமைச்சக அலுவலகங்களுக்கு விரிவான முறையான பிரதிநிதித்துவம் அனுப்ப முன்மொழியப்பட்டுள்ளது. விரிவான முறையான பிரதிநிதித்துவத்தின் வரைவு கீழே உள்ள pdf இல் கொடுக்கப்பட்டுள்ளது
முறையான பிரதிநிதித்துவத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்
முறையான பிரதிநிதித்துவ வரைவுக்கு கூடுதல் விவரங்கள் அல்லது பரிந்துரைகளைப் பகிர விரும்பினால், feedback@saptharishi.org க்கு மின்னஞ்சல் செய்யவும்.