இந்துக்களின் அழிவு மற்றும் பாரதீய நாகரீகத்தை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியே பிராமண சமூகத்திற்கு எதிரான போலிக் கதைகள் என்று நாங்கள் நம்புகிறோம். இத்தகைய பிரச்சாரகர்களிடம் பணம் மற்றும் பல வளங்கள் இருந்தாலும், எங்களிடம் இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன:
சத்தியம் & உங்களைப் போன்ற ஆதரவாளர்கள்.
உங்களில் பலருக்கு நேரமின்மை மற்றும் குடும்பம்/தொழில்சார் பொறுப்புகள் இருப்பதை நாங்கள் அறிவோம். எனவே, எங்கள் தன்னார்வத் திட்டங்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
– நீங்கள் நேரில் வந்து செயல்பட தேவை இல்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் முறையில், உங்களுக்கு வசதியான நேரத்தில் பங்களிக்கலாம்.
– பணி வடிவமைப்பு: உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு பெரிய பணிக்கு பதிவு செய்வதற்கு பதிலாக, உங்களால் இயன்ற சிறிய கால அளவிற்கு ஏற்ற பங்களிப்பை மேற்கொள்ளலாம் (உதாரணமாக, வாரத்திற்கு 2 மணிநேரம்).
– நிதி உதவி எதிர்பார்ப்பின்மை – நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என்களிடமிருந்து எந்த நிதி கோரிக்கையும் கிடையாது.
இன்றே எங்களுடன் தன்னார்வத் தொண்டராக இணைந்து, நம் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவுங்கள்.
எங்களுக்கு தற்போது முதன்மையாக இந்திய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு, சமூக விழிப்புணர்வு உருவாக்கம், சமூக ஊடக செய்தி அனுப்புதல் மற்றும் ஆராய்ச்சியில் ஆதரவு ஆகியவற்றில் தன்னார்வ ஆதரவு தேவைப்படுகிறது.
சமஸ்கிருத சுபாஷிதாவின் கூற்றுப்படி:
अल्पानामपि वस्तूनां संहति: कार्यसाधिका तॄणैर्गुणत्वमापन्नैर् बध्यन्ते मत्तदन्तिन:
தமிழ் மொழிபெயர்ப்பு:
(சிறிய விஷயங்கள் ஒன்று சேர்த்தால் ஒரு பெரிய வேலை செய்ய முடியும். வைக்கோலால் செய்யப்பட்ட கயிறு, சக்திவாய்ந்த ஒரு யானையை கட்டுப்படுத்தும். ஒற்றுமையே பலம்.)